நடிகை ஹேமாமாலினி வாக்களிப்பு

மும்பை வில்லேபார்லோ பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகை ஹேமாமாலினி வாக்களிப்பு
x
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமாமாலினி, அவரது மகள்கள் ஈஷா தியோல் மற்றும் அதானா தியோல் ஆகியோருடன் வந்து, மும்பை வில்லேபார்லோ பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

நடிகை நக்மா வாக்களிப்பு



மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை நக்மா தனது வாக்கைப் பதிவு செய்தார்.


சச்சின் டெண்டுல்கர் குடும்பத்துடன் வாக்களிப்பு



கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி மற்றும் மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோருடன் வந்து, மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வாக்களிப்பு


உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், அந்தத் தொகுதி வேட்பாருமான ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார், பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. இந்நிலையில் மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர், அவரது கணவர் ஜூபின் இராணியுடன் வந்து வாக்களித்தார்.

நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு


மும்பையின் ஜூகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி ஜெயா பச்சன், மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன், அவரது மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.

டென்னிஸ் வீரர் மகேஷ்பூபதி வாக்களிப்பு



மும்பை அன்னி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது வாக்கை பதிவு செய்தார்.

பாந்த்ரா வாக்குச்சாவடியில் வாக்களித்த உத்தவ் தாக்கரே



நாடுமுழுவதும் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 72  மக்களவைத் தொகுதியில் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையிவ், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ராவில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச் சாவடியில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்