3ஆம் கட்ட மக்களவை தேர்தல் - முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்களிப்பு

மூன்றாம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
3ஆம் கட்ட மக்களவை தேர்தல் - முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்களிப்பு
x
மூன்றாம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

திருவனந்தபுரம்
கேரள தலைநகர் திருவனந்தபுரம் ஜவகர் நகர் அரசு பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் அம்மாநில ஆளுநர் சதாசிவம் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

கன்னூர்
பினராயில் உள்ள ஆர்.சி.அமலா பள்ளி வாக்குச்சாவடியில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கை செலுத்தினார்.

திருவனந்தபுரம் 
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் சசிதரூர் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். 

ராஜ்கோட்
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள அனில் கியான் மந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச் சாவடியில், குஜராத் முதலமைச்சர் விஜய்​ ரூபானி தனது மனைவி அஞ்சலியுடன் வந்து வாக்களித்தார்.

மைன்புரி
முலாயம் சிங் யாதவின் சகோதரரான அபய் சிங் யாதவ், உத்தர பிரதேச மாநிலம் மைன்புரியில் உள்ள சைஃபய் வாக்குச்சாவடியில், தனது வாக்கை செலுத்தினார்.

புவனேஸ்வர்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், அம்மாநில தலைநகர் புவனேஸ்வரில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

தலச்சேர்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலம், தலச்சேரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
Next Story

மேலும் செய்திகள்