சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

"தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும்"
சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
x
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் அவை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. இதில், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்-டோக், ஷேர் சேட் உள்ளிட்ட சமூக வலைத்தள பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியது. பிரசாரம் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க  உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கடமைகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதில் உள்ள பொறுப்புகள் குறித்தும் ஆணையம் சுட்டிக் காட்டியதாகவும், அவற்றை  சமூக வலைத்தள பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்