பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் : தடுத்து நிறுத்திய போலீசாருக்கு காயம்
பதிவு : பிப்ரவரி 23, 2019, 07:34 AM
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர். அங்குள்ள புல்தானா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஸ்வேதா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் இருவரும் பங்கேற்றபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இரண்டு கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் உருவானது. எனவே, புல்தானா காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க இரு தரப்பினரும் சென்றனர். அப்போது,  காவல் நிலையத்திலேயே இரு கட்சியினரும் மோதிக் கொண்டனர். அவர்களை சமரசம் செய்யச் சென்ற  போலீசார் 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.