அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கு - கிறிஸ்டியன் மிச்செலுக்கு 7 நாள் போலீஸ் காவல்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டின் மைக்கேல், இந்த முறைகேட்டில் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் பெயரை கூறியதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கு - கிறிஸ்டியன் மிச்செலுக்கு 7 நாள் போலீஸ் காவல்
x
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு 3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 360 கோடி ரூபாய் லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.

* இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள்  கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 22-ம் தேதி நீதிமன்றம் அனுமதித்தது.

* விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

* அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையின் போது சோனியா காந்தியின் பெயரை மைக்கேல் குறிப்பிட்டதாக கூறினார். 

* இத்தாலி பெண்ணின் மகன் என்றும் மைக்கேல் கூறியதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

* இதனால் இந்த வழக்கில் உள்ள சதியை வெளியே கொண்டு வர கூடுதல் விசாரணை தேவைப்படுகிறது எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

* இதைத்தொடர்ந்து, பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேலை மேலும் 7 நாள் விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்