இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளதா? - ஐ.நா. மனிதவள மேம்பாட்டு துறை அறிக்கை

கடந்த 28 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளதா? - ஐ.நா. மனிதவள மேம்பாட்டு துறை அறிக்கை
x
* ஐ.நா. மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 1990ஆம் ஆண்டில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 57 புள்ளி 9 ஆண்டுகளாக இருந்ததாகவும் தற்போது, அது 68 புள்ளி 8 ஆண்டுகளாக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

* இதுபோல, தனி நபரின் ஆண்டு சராசரி வருமானமும் சுமார் ஒன்றேகால் லட்ச ரூபாயில் இருந்து நான்கரை லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இது 267 சதவீதம் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

* அருகில் உள்ள பிற ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது, கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம் ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ச்சி அதிகம் எனவும் உலக அளவில் சராசரியான மனிதவள  மேம்பாட்டு வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சி 50 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

* பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை விட, இந்தியாவில் பெண்களுக்கு அதிக உரிமை உள்ளதாக கூறியுள்ள அந்த அறிக்கையில், நாடாளுமன்றத்தில் 11 புள்ளி 6 சதவீதம் மட்டுமே பெண் எம்பிக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இதுபோல, இந்திய பெண்களின் சராசரி ஆயுள்காலம்  70 புள்ளி 4 ஆண்டுகளாக இருப்பதாகவும் இது ஆண்களின் சராசரி ஆயுளை விட 3 ஆண்டு கூடுதல் எனவும் கூறப்பட்டுள்ளது. 

* மேலும், இந்திய ஆண்களை விட, இந்திய பெண்கள் தான் அதிக ஆண்டுகள் கல்வி கற்பதாகவும் ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்