டாடா நானோவின் உற்பத்தி நிறுத்தம்...

டாடா நிறுவனம் தனது நானோ கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. ஆர்டர் செய்தால் நானோ கார் தயாரித்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
டாடா நானோவின் உற்பத்தி நிறுத்தம்...
x
டாடா நானோவின் உற்பத்தி நிறுத்தம்...

85 ஆண்டுகளுக்கு முன் ஹிட்லர் சொன்ன வார்த்தை, ஜெர்மெனியில் சாமானிய மக்களுக்கான கார் என, ஒன்று இருக்க வேண்டும். அது  அனைவரும் வாங்கும் வகையில் இருக்கும் என்று கூறினார். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன், ஹிட்லர் சொன்ன அதே விஷயத்தை ரத்தன் டாடா சொன்னார்.. ஆம், மக்களுக்கான கார், உலகிலேயே மிக குறைந்த விலை கொண்ட கார் என்றெல்லாம் விளம்பரபடுத்தப்பட்டது டாடா நானோ.. பின்னர், உலகின் விலை குறைந்த கார் அதாவது, THE WORLDS CHEAPEST CAR என்று விளம்பரபடுத்தியது தவறு, அதனாலேயே இந்த கார் விற்பனை ஆகவில்லை என்று  வருத்தப்பட்டார் ரத்தன் டாடா. டாடா நானோ உற்பத்தியை நிறுத்த வேண்டும், அது நஷ்டம் ஏற்படுத்துவதாக பல முறை, தான் சொல்லியும் ரத்தன் டாடா செவி சாய்க்கவில்லை என்று தெரிவித்தார், டாடா நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அதன் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி. இந்நிலையில்,  ஜூன் மாதம் ஒரே ஒரு நானோ காரை மட்டுமே தயாரித்துள்ளது டாடா நிறுவனம். மே மாதம் 3 நானோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. கார் உற்பத்தி தொடங்கிய காலத்தில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்த நானோ,  கார் வாங்க வேண்டும் என்ற பலரின் கனவுகளை நினைவாக்கிய ஒரு கார். நானோ கார், டாடாவின் செண்டிமெண்ட் ஆன விஷயம் அதை நிறுத்தபோவது இல்லை, பேட்டரியிலும் டாடா நானோ வரும் என்று தெரிவித்த டாடா நிறுவனம், டாடா நானோ இதே நிலையில் இருந்தால், 2019ம் ஆண்டுக்கு பின் வேலைக்கு ஆகாது என்று தெரிவித்துள்ளது...  இந்நிலையில், நானோவின் உற்பத்தி நிறுத்தி கொள்ளப்பட்டாலும் அது முழுமையாக அல்ல, ஆடரின் பெயரில் கார்கள் தயாரித்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்