தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடுங்கள் - நீர்வள அதிகாரிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு ஜூலை மாதத்திற்கான நீரை திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடுங்கள் - நீர்வள அதிகாரிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் உத்தரவு
x
"தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடுங்கள்"

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான குடகு, ஹாசன், சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களில்  கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கு, தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கர்நாடகா கடந்த மாதம் 3 டி.எம்.சி. நீரும், இந்த மாதம் இதுவரை 6 டி.எம்.சி. நீரும் தமிழகத்துக்கு திறந்து விட்டு உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கபினி அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.   இதேபோல், கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்திற்கு கர்நாடகம் தமிழகத்துக்கு 34 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்