நீட் தேர்வு ஆன் லைன் மூலம் நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பிப்ரவரி, மே மாதத்தில் 2 தேர்வு நடத்தப்படும், மாணவர்கள் ஒன்று அல்லது 2 தேர்வையும் எழுதலாம் என அறிவித்துள்ளார்
நீட் தேர்வு ஆன் லைன் மூலம் நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
x
* நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஆன்லைன்  மூலம் நடத்தப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

* டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட், ஜேஇஇ மெயின், நெட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்றார். 

* நீட் தேர்வு வருடத்தில் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் என்றும், இவற்றில் ஒன்றிலோ அல்லது  இரண்டு தேர்வுகளையுமே மாணவர்கள் எழுதலாம் என்றும் அவர் கூறினார். 

* பாடத்திட்டம், வினாக்களை தேர்வு செய்யும் முறை, கட்டணம், மாற்று மொழி உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

* போட்டி தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கணினி மையங்களில் இலவசமாக பயிற்சி எடுத்து கொள்ளலாம் என்று கூறிய மத்திய அமைச்சர், இந்த மையங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்