மும்பையில் வெளுத்து வாங்கும் மழை - வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

பல்வேறு மாநிலங்களில், வெளுத்து வாங்கும் மழையால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது
மும்பையில் வெளுத்து வாங்கும் மழை - வீட்டிற்குள் முடங்கிய மக்கள்
x
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சில பகுதிகளில், வாகனங்கள் செல்ல முடியாத படி, மழை நீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்.கன மழையின் காரணமாக, சாலைகளில்  வெள்ளம் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பொது மக்கள், வீடுகளுக்குள் முடங்கினர்.  பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

கனமழை எதிரொலி - ரயில்வே பாலம் இடிந்தது

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, அந்தேரி மேற்கு பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுநகொட்டித் தீர்த்த கன மழை - நிலச்சரிவு்தது. இதனால், அந்தேரியில் இருந்து விரார் செல்லும் வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கொட்டித் தீர்த்த கன மழை - நிலச்சரிவு

இமாச்சல பிரதேச மாநிலத்தில், கன மழை கொட்டித்தீர்த்தது. சாம்பா, காங்ரா, மந்தி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய தொடர் மழையால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களையும் மழைநீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில், நிலச்சரிவு காரணமாக, மலைப்பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி நி்ற்கின்றன.

கன மழை, வெள்ளம் - 100 கிராமங்கள் பாதிப்பு

அஸ்ஸாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

கன மழை - வெள்ள அபாய எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கன மழையால், ஜீலம் நதிக் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை ஆளுநர் NARINDER NATH VOHRA நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினார்

Next Story

மேலும் செய்திகள்