2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை முற்றிலும் ஒழிப்பு

உலக அளவில் ஒரு வினாடிக்கு 44 பேர் என்ற விகிதத்தில் தீவிர வறுமையில் இருந்து இந்தியர்கள் விடுபட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை முற்றிலும் ஒழிப்பு
x
* உலக அளவில் அதிகமான ஏழைகள் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

* இந்நிலையில், 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தீவிர வறுமை நிலை முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

* நாடுகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து  வேல்டு பாவர்ட்டி கிளாக் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது

* இந்தியாவில் விநாடிக்கு 44 இந்தியர்கள் விகிதத்தில் தீவிர வறுமையில் இருத்து மக்கள் விடுபட்டு வருவதாகவும்,  

* இந்நிலை தொடர்ந்தால் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் வறுமை நிலை 3 சதவிதத்திற்கு கீழ் குறையும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* 87 கோடி மக்கள் தீவிர வறுமை நிலையில் உள்ள நைஜீரியா, ஏழைகள் அதிக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

* இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 73 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் உள்ளனர்.

* இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் குறைந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து அது மூன்றாம் இடத்திற்கு குறையும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

* இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்