அதிமுக எம்.பி.க்கள் தொடர் முழக்கம் - மக்களவை 21 வது நாளாக முடங்கியது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அதிமுக எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்ற மக்களவை 21 வது நாளாக முடங்கியது.
அதிமுக எம்.பி.க்கள் தொடர் முழக்கம் - மக்களவை 21 வது நாளாக முடங்கியது
x
மக்களவை இன்று காலை துவங்கியதும், வழக்கம் போல், அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, முழக்கங்களை எழுப்பினர். இதனால், மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வங்கி விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக எம்பிக்களின் தொடர் அமளியால், மக்களவை 21 வது நாளாக முடங்கியது. 


Next Story

மேலும் செய்திகள்