இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-09-2023)

x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, முறைப்படி காஞ்சிபுரத்தில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... விழாக் கோலம் பூண்டது காஞ்சி மாநகர்...

முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காஞ்சிபுரம் வருவதை முன்னிட்டு அனைத்தும் தயார் நிலை... சுமார் 40 கி.மீ. தூரம் வரவேற்பளிக்க ஏற்பாடு...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 ரூபாய் இன்றே செலுத்தப்பட்டதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு... டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் அரைமணி நேரம் நீடித்த சந்திப்பில், இருவரும் ஆலோசனை...

நடிகை விஜயலட்சுமி புகார்... விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளதாக, சீமான் விளக்கம்... தாம் ஆஜராகும் போது, விஜயலட்சுமியும், வீர லட்சுமியும் ஆஜராக வேண்டும் என்றும் வலியுறுத்தல்...

இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...


Next Story

மேலும் செய்திகள்