சரக்கு வாங்க நின்ற மதுபிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் விஷால் - வைரலாகும் வீடியோ

x

படத்திற்காக போடப்பட்ட டாஸ்மாக் செட்டில், மது வாங்க வந்தவர்களை நடிகர் விஷால் விரட்டுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் ரத்னம் படத்தின் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட செட்டில், மதுப்பிரியர்கள் மது வாங்க வந்ததாக தெரிகிறது. இதனைக்கண்ட விஷால், மதுப்பிரியர்களை அங்கிருந்து விரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், குறிப்பிட்ட வீடியோ படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்டதாக என, ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்