காரை குலுக்கி நசுக்கிய ரசிகர்கள்.. உள்ளே கிடுகிடுவென ஆடிய நடிகர் விஜய்

x

கேரளா வந்த நடிகர் விஜயின் காரை முண்டியடித்தபடி சூழ்ந்த ரசிகர்களால் கார் கண்ணாடி, கதவுகள் சேதமடைந்தது.

'தி கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா வந்துள்ளார். தொடர்ந்து 4 நாட்கள் விஜயின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு வந்த அவருக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்ட விஜயை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்தனர்.

ஒருகட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் காரை நெருங்கி முண்டி அடித்ததால், பாதுகாவலர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். இதனால், கார் சேதம் அடைந்த நிலையில், விஜய் காருக்குள் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்