ஒரே வீட்டில்.. லிவிங் டூ கெதரில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா?.. கையும் களவுமாக சிக்கிய "ஆடியோ"

x

சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் அவர்

living togetherல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தாவின் ரசிகர்களை கலங்கடித்து வந்தார் விஜய்தேவரக்கொண்டா. குஷி பட ப்ரமோஷனுக்காக, படத்தில் வருவது போலவே ஜோடியாக சுற்றுவது..ஒரே மாதிரி போஸ்ட் போடுவது, விரைவில் திருமண அறிவிப்பு என ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்தனர்.

இப்படி இருக்க படம் வெளியாகி ஓரளவு வசூலை குவித்ததும்..சமந்தா விஜய் தேவர்கொண்டா குறித்த எந்தவித போஸ்டும்..கிசுகிசுக்களும் வெளிவரவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் தான் மற்றொரு விஷயத்தை சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மோப்பம் பிடித்துள்ளனர். அண்மையில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படத்தில் அவர் நிற்கும் மாடியை கவனித்த ரசிகர்கள் இதை எங்கேயோ பார்த்துள்ளோமே என விஜய்தேவரக்கொண்டாவின் இன்ஸ்டா போஸ்ட் பக்கம் சென்றனர்.

அதில் விஜய்தேவரகொண்டாவும் அதே மாடி பேக்ரவுண்டுடன்..போஸ் கொடுத்த புகைப்படத்தையும் கவனித்துள்ளனர். இந்த இரண்டையும் ஒப்பிட்டு இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக பலரும் முடிவு செய்து விட்டனர்.

ஏற்கனவே மாலத்தீவுக்கு இந்த ஜோடி ட்ரிப் போனதாக பேசப்பட்டது. இன்ஸ்டாகிராம் லைவ்வில் ராஷ்மிகா பேச..பின்னணியில் விஜய்தேவரகொண்டாவின் குரல் கேட்க..இதனை அவர்களின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

தற்போது இவர்கள் குறித்த கிசுகிசுக்கள் தணிந்த நிலையில், ஒரு ஃபோட்டோவால் இருவரும் மீண்டும் வசமாக சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், என இரு படங்களில் நடித்து தங்கள் ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கிய இவர்கள், நிஜத்திலும் ஜோடியாக போவதாக பேசப்படுகிறது.

இருப்பினும் இது குறித்து விஜய்தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் இதுவரை வாய்த்திறக்கவில்லை. இப்படி இருக்க..

விஜய் தேவரகொண்டா சமந்தா காதலிப்பதாக கூறியது வெறும் கட்டுக்கதை தான் என அறிந்து கொண்ட சமந்தா ரசிகர்கள் இப்போது தான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்