"நெல்சனுக்கு கால் செய்த விஜய்".. "தலைவர் ரஜினி எப்படி இருக்கிறார்?" -ஜெயிலர் ஷூட்டிங் - நெல்சனுக்கு விஜய் அட்வைஸ்

x

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையேயான உறவு குறித்து ஜெயிலர் திரைப்படத்தின் கலை இயக்குநர் கிரண் மனம் திறந்துள்ளார்... ஜெயிலர் படப்பிடிப்பின் முதல் நாள் சீக்கிரம் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல நடிகர் விஜய் தான் நெல்சனுக்கு கால் செய்து அறிவுறுத்தினாராம். அதேபோல், தான் ஒரு தெலுங்கு படப்பிடிப்பிற்காக சென்ற போது வாரிசு செட்டிற்கு சென்றதாகவும், அங்கு தன்னைக் கண்டதும் விஜய், "தலைவர் எப்படி இருக்கிறார்? நன்றாக இருக்கிறாரா? ஆக்டிவாக இருக்கிறார் அல்லவா? என அக்கறையுடன் நலம் விசாரித்ததாகவும் கிரண் குறிப்பிட்டுள்ளார். அவர் மிகுந்த ஆக்டிவாக உள்ளதாகவும், நெல்சனுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தான் தெரிவித்த போது, "நெல்சன் எல்லோரையும் கட்டிப் போட்டு விடுவார்..." என்று விஜய் புகழ்ந்ததாகவும் கிரண் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்