நடுவானில் விமான கோளாறு... "மரணத்திலிருந்து தப்பித்தோம்..." ராஷ்மிகாவின் திக் திக் நிமிடங்கள்

x

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த ஏர் விஸ்தாரா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது... நடிகை ஷ்ரத்தா தாஸ் உடன் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது

இந்த சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களால் விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் மும்பைக்குத் திரும்பியுள்ளது... சமீபத்தில் "அனிமல்" படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்... ஷ்ரத்தா தாஸுடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபியை வெளியிட்டு, "இன்று நாம் மரணத்திலிருந்து தப்பித்தோம்..." என்று குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்