துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம்.. நடனமாடிய நடிகர் அஜித்

x

நடிகர் அஜித்குமார் புத்தாண்டை துபாயில் நடனமாடி கொண்டாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித் நடித்து வரும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முக்கிய காட்சிகள், துபாயில் படமாக்கப்பட்டு வருகிறது. அங்கு படக்குழுவுடன் நடிகர் அஜித் படகில் செல்வதை பார்த்த ரசிகர்கள், அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, தல... தல... என ரசிகர்கள் கத்தியதை பார்த்த அஜித், அவர்களை நோக்கி கை அசைத்தவாறு படகில் சென்றார். அத்துடன், புத்தாண்டை கொண்டாடிய அஜித்குமார் நடனமாடி அசத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்