10 கோடி பார்வைகளை கடந்த "நா ரெடி" பாடல் ...வெளியாகி 50 நாள் கடந்தும் வைப் குறையாத "நா ரெடி

x

விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடி" பாடல் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியானது. அனிருத் இசையில் விஜய் குரலில் வெளியான இந்த பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்