பிரபல குணச்சித்திர நடிகர் மறைவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் உடல் நலக்குறைவால் காலமானார்...

தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர் மதுரை மோகன். பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு முண்டாசுப்பட்டி திரைப்படம் தான் அடையாளம் தந்தது. இவரின் மற்றொரு அடையாளம் நீண்ட மீசை... அண்மையில் வெளிவந்த வீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்... மதுரையை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்