`மான் கராத்தே' புகழ் இயக்குநருடன் கைகோர்க்கும் அருண் விஜய்

x

சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன், அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு 'ரெட்ட தல' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானி கதாநாயகியாகவும், தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்