"இது தான் பவதாரிணியுடனான கடைசி போட்டோ.." - நொறுங்கி போன அண்ணன் வெங்கட் பிரபு

x

மறைந்த பாடகி பவதாரிணியுடனான நினைவுகளை இயக்குநர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் கடந்த வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். அவரது உடல் தேனி பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் பவதாரிணியுடன் எடுத்த கடைசி புகைப்படத்தை அவரது சகோதரரும், இயக்குநருமான வெங்கட்பிரபு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்