"அது காதல் கடிதம்..."குணா படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த கமல்

x

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற வீடியோ வெளியாகியுள்ளது... படக்குழுவினரை மனமாற பாராட்டிய கமல்ஹாசன் குணா படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்... குணா குகையில் கிடைத்த குரங்குகளின் மண்டை ஓட்டைத் தான், ஹே ராம் படத்தில் தான் பயன்படுத்தியதாகவும், குணா படத்திற்கு தான் முதலில் மதிகெட்டான் சோலை என்ற பெயரைத் தான் பரிந்துரைத்ததாகவும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்... மேலும் கண்மணி அன்போடு காதலன் பாடல் தனக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இடையிலான காதல் கடிதம் என்று கூறி நெகிழ்ந்தார்...


Next Story

மேலும் செய்திகள்