மீண்டும் களத்தில் கலக்கலாக இந்தியன் 2 தாத்தா..!ஷங்கருக்கு ஷாக் கொடுத்த ரசிகர்கள்!

x

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டினாலும், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. சில தினங்களுக்கு முன்பு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சென்னை திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் இந்தியன் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ராட்சத கிரேன் மூலம் கட்டடங்களில் இந்தியன் தாத்தா வேடத்தில் கமல்ஹாசனின் உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்