"அந்த இடத்தில் இருந்து வந்தவன் நான்; இது மாரி செல்வராஜையே சேரும்..." - வடிவேலு நெகிழ்ச்சி

x

மேலும், உலக சினிமாவில் 12 படங்களும், இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட்டன... உலக சினிமாவில் தேர்வான 12 படங்களில் 2 படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை... தேர்வு செய்த படங்களுக்கு காசோலை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன... உலக சினிமா சார்பில் சிறந்த 3 படங்களை தேர்வு செய்யப்பட்டன... சிறந்த உலக சினிமா திரைப்படத்திற்கான விருது ருமேனிய திரைப்படமான லிபெர்டேட்டிற்குக் கிடைத்தது... இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கிய அயோத்தி படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது... 2தாக இயக்குனர் கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது... சிறப்பு ஜூரி விருதினை விடுதலை படத்திற்காக இயக்குனர் வெற்றி மாறன் பெற்றார்... அதே போல் இயக்குனர் பிரபு சாலமனின் செம்பி திரைப்படத்திற்காக அதில் நடித்த நிலாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்பட்டது... அயோத்தி திரைப்படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ராணிக்கு சிறந்த கதாபாத்திர விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதினை மாமன்னன் படத்திற்காக வடிவேலு பெற்ற நிலையில், ரசிகர்களை அழுக வைத்ததற்காக தனக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக மேடையில் கலகலப்பாக பேசினார்...


Next Story

மேலும் செய்திகள்