'F.R.I.E.N.D.S' புகழ் மேத்தியூ பெர்ரி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சித் தொடரான ஃப்ரெண்ட்சில் சாண்ட்லராகக் கலக்கிய மேத்தியூ பெர்ரி மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது... ஃப்ரெண்ட்ஸ் மட்டுமல்லாது 17 Again உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் மேத்தியூ நடித்துள்ளார். தனது கலகலப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்...

54 வயதான இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டின் குளியலறை Hot tubல் சடலமாகக் கிடந்துள்ளார்... ஏதும் வன்முறை நிகழ்ந்ததாகவோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியதாகவோ ஆதாரங்கள் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்