ஃபுட்பால் பிளேயரான அஜித்.. `விடாமுயற்சி'யுடன் ஒரு கேம்.. இணையத்தை கலக்கும் பிக்ஸ்

x

குழந்தைகளுடன் நடிகர் அஜித்குமார் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகிவரும் விடாமுயற்சி படத்தில் அஜித் தற்போது நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிந்த நிலையில், படக்குழு சிறிய பிரேக் எடுத்து சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில், குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவரும் அஜித், தன் மகன் ஃபுட்பால் பயிற்சி பெறும் இடத்திற்கு சென்று குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்