அவசரமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற நடிகர் கமல்ஹாசன் - எதற்கு தெரியுமா..?

x

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில், கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். தன்னுடைய பெயரில் இயங்கும் கதர் ஆடை விற்பனை தொழிலை மேம்படுத்தவும், திரைத்துறை சார்ந்த சில படிப்புகளில் கவனம் செலுத்தும் வகையிலும் அமெரிக்காவுக்கு பயணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரம் அமெரிக்காவில் தங்கியிருந்து, அதன் பின்னர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்