இன்று 44வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரபாஸ்

x

பான் இந்தியா நடிகரான பிரபாஸ், இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களால் டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபாஸ், கடந்த 2002ஆம் ஆண்டில், ஈஸ்வர் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கு நடிகராகவே அறியப்பட்ட பிரபாஸ், ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம், பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பிரபாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்