நடிகர் ம‌ம்முட்டியை பார்க்க ஆசைப்பட்ட மூதாட்டிக்கு அடுத்து நடந்த ஆச்சரியம்

x

தன்னை பார்க்க ஆசைப்பட்ட மூதாட்டியை, கார் அனுப்பி படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து நடிகர் ம‌ம்முட்டி சந்தித்த‌து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சியில் பேசிய பரவூரை சேர்ந்த அம்மாளு அம்மாள் என்ற மூதாட்டி, தான் ம‌ம்முட்டியின் தீவிர ரசிகை என்றும், ம‌ம்முட்டியை சந்திக்க ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார். இதை அறிந்த நடிகர் ம‌ம்முட்டி, கார் அனுப்பி, பரவூரில் டர்போ படப்பிடிப்பு தளத்திற்கு மூதாட்டியை வரவழைத்தார். மகிழ்ச்சியோடு ம‌ம்முட்டியை சந்தித்த மூதாட்டி, ம‌ம்முட்டியின் பட போஸ்டர்களை காட்டி மகிழ்ந்தார். மூதாட்டியிடம் ம‌ம்முட்டி பேசி மகிழும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்