பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

x

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களின் ஒருவர் லட்சுமி நாராயணன். சேஷூ என ரசிகர்களால் அறியப்பட்ட இவர், லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். நடிகர் சந்தானத்தின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவரது நடிப்பு, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் பெரிதும் பேசப்பட்டது. இந்தசூழலில் சேஷூ, மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கு 10 லட்ச ரூபாய் தேவைப்பட்ட நிலையில், அவரது நண்பர்கள் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் சேஷூ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்