மாநாடு திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் - மகிழ்ச்சியில் மாநாடு படக்குழு

சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
x
சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியானது. டைம் லூப் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த  இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரை தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்