அருண் விஜய் நடித்துள்ள "பார்டர்" திரைப்படம் - திரைப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனு தொடர்பாக படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் - திரைப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு
x
நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனு தொடர்பாக படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சார்லஸ் ஆண்டனி சாம்  என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் தான் ஏற்கனவே பார்டர் என்ற தலைப்பில் திரைப்படம் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில்  பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பார்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரத்தை பார்த்து தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அருண்விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம்  செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க , படத்தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்