ஹிப் ஹாப் தமிழா ஆதி யூடியூப் சேனல் முடக்கம் - வீடியோக்களை அழித்த ஹேக்கர்கள்
பதிவு : ஜூலை 27, 2021, 01:12 PM
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அடுத்தடுத்து பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்படுவது, சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களின் இணைய கணக்குகள் முடக்கப்படுவது ஒரு கலாச்சாரமாகிவிட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு தொடர்ந்து பலரது இணைய கணக்குகளை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குஷ்புவின் பெயரை மாற்றி பிரையன் என்று பதிவிட்ட ஹேக்கர்கள், அவர் பதிவிட்டிருந்த பல ட்வீட்களை அழித்தனர். இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதுபோன்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி..குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, திரைக்கு வருவதற்கு முன்னரே சுயமாகவும், திரைப்படங்களிலும் பல ஹிப் ஹாப் பாடல்களை பாடி பிரபலமடைந்தார். சிவக்குமாரின் சபதம், அன்பறிவு என்ற படங்களில் நடித்து வரும் இவர், யூடியூபில் ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் சேனலை வைத்துள்ளார். இதனை 20 லட்சம் பேர் பின் தொடர்ந்து வரும் நிலையில், தனது பாடல்களை அந்த சேனலில் பதிவேற்றி வந்தார். இந்த நிலையில், ஹிப்ஹாப் தமிழா யூடியூப் சேனலை ஹேக் செய்த மர்மநபர்கள், அனைத்து வீடியோக்களையும் அழித்து அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆதி தரப்பு, அழிக்கப்பட்ட வீடியோக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

50 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்

சிம்பு பாடிய 'சிஎஸ்கே சிங்கங்களா' - சிஎஸ்கே ரசிகர்களை வெறியேற்றும் சிம்பு பாடல்

11 views

'ஓ மை கடவுளே' படத்தின் கன்னட ரீமேக் - கன்னட ரீமேக்கில் நடிக்கும் பிரபு தேவா

"ஓ மை கடவுளே" படத்தின் கன்னட ரீமேக்கில், நடிகர் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

146 views

'அனபெல் சேதுபதி' குறித்து சி.எஸ்.அமுதன் ட்வீட் - "என்னால் நிச்சயம் பந்தயம் கட்ட முடியும்"

அனபெல் சேதுபதி படம் குறித்து, இயக்குனர் சிஎஸ் அமுதன் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

8430 views

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

112 views

ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' டிரைலர் வெளியீடு

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

16 views

பிசாசு-2' படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி - "சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டது ஏன்?"

மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.