100 நாட்களை கடந்த மண்டேலா திரைப்படம் - படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

மடோன் அஷ்வின் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம், 100 நாட்களை கடந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்
100 நாட்களை கடந்த மண்டேலா திரைப்படம் - படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
x
மடோன் அஷ்வின் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம், 100 நாட்களை கடந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தேர்தலில் அளிக்கப்படும் தனிநபர் வாக்கின் மதிப்பு குறித்து நகைச்சுவையாக கூறிய இத்திரைப்படம், அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மண்டேலா படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், அந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த யோகி பாபு, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்