ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.
ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..
x
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஹாரி பாட்டரில் வரக்கூடிய காட்சிகளைப் போலவே அரங்கு அமைக்கப்பட்டு, அதில் இடம்பெறும் பொருட்கள் கொண்ட மாபெரும் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் ஹாரி பாட்டர் படத்தில் இடம்பெறும் ஃபீனிக்ஸ் பறவையின் மாதிரி, ஹாக்வார்ட்ஸ் மாயாஜாலப் பள்ளியின் சீருடைகள், ராட்சத பாம்பு மாதிரி, அந்தரத்தில் பறக்கும் ஹாரிபாட்டர் புத்தகங்கள், டெலிஃபோன் பூத், மந்திரக் கோல்கள், கிரிஃபின் என்றழைக்கப்படும் புராணகாலத்து விலங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது நிச்சயம் ஹாரிபாட்டரின் தீவிர ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்