7ம் வகுப்பு மாணவன் நடித்த முதல் படம் - ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் நடித்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு சென்றுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
7ம் வகுப்பு மாணவன் நடித்த முதல் படம் - ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
x
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் நடித்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு சென்றுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்..

தான் நடித்த முதல் திரைப்படமே ஆஸ்காருக்குச் சென்றுள்ளதால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் சிறுவன் ஆதர்ஷ்ராஜா...

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள  ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதர்ஷ்ராஜா... விவசாயி செல்லமுத்து மற்றும் பாரதி தம்பதியரின் மகனான இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார்...

கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் விஜிஸ்மணி என்பவர் இயக்கிய  MMMMM "சவுண்ட் ஆஃப் பெய்ன்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்...

தேன் சேகரிக்கும் குரும்ப இனத்தைச் சேர்ந்த இந்தியாவிலுள்ள ஆதிவாசிகளுக்கென வந்த முதல் திரைப்படமான இதில், விஜயன் கதாநாயகனாக நடித்துள்ளார்...

மலைப்பிரதேசங்களில் இருக்கும் தேனை சேகரித்து தங்கள் அன்றாட வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர் குரும்ப இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி குடும்பங்கள்... செல்போன் டவர்களால் தேனீக்கள் இனம் அழிந்து வருவதால் காட்டில் இருந்து தேன் சேகரிக்க முடியாத நிலை ஏற்படும்போது, அத்தொழிலையே நம்பி இருக்கும் குரும்ப இன மக்களின் அன்றாட பிரச்சினைகளை திரைப்படமாக நம் கண் முன் காட்டியுள்ளனர்...

இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் மூன்று திரைப்ப்டங்களில் முதல் திரைப்படமாக இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது... 

இதையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதி விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஆத்ர்ஷ்ராஜா நடித்த முதல் திரைப்படமே ஆஸ்கார் விருதுக்குச் சென்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்... 


Next Story

மேலும் செய்திகள்