அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகும் 'மாஸ்டர்' - பணத்தை தர மறுப்பதாக தகவல்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாவதால் வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகும் மாஸ்டர் - பணத்தை தர மறுப்பதாக தகவல்
x
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாவதால் வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த 13-ம் தேதி வெளியானது. கொரோனா பாதிப்பால் இந்த படம் ஒடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படத்தை திட்டமிட்டபடி திரையரங்கில் படக்குழு வெளியிட்டது. விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு திரையரங்க உரிமையாளர்கள் பாராட்டுகளை தெரிவித்துவந்த நிலையில் தற்போது மாஸ்டர் படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

படம் வெளியாகி 15 நாட்களே ஆன நிலையில் ஒடிடியில் வெளியிடுவது விநியோகஸ்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு இது கடும் நெருக்கடியை கொடுத்துள்ளதால் , அவர்கள் தாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட 50 சதவீத தொகைக்கு பதில் 35 சதவீதம் மட்டுமே தரப்படும் என தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சில வெளிநாடுகளில் இன்னும் முழுமையாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், அதற்குள் படம் அமேசானில் வெளியாவதால் அவர்கள் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனி தமிழ் படங்களை திரையிட மாட்டோம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்