ஜாக்கி சானின் 'வான்கார்ட்' பட ஸ்னீக் பீக் காட்சி - வயதானாலும் அதிரடியில் மிரட்டும் ஜாக்கி

இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "வான்கார்ட்".
ஜாக்கி சானின் வான்கார்ட் பட ஸ்னீக் பீக் காட்சி - வயதானாலும் அதிரடியில் மிரட்டும் ஜாக்கி
x
இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "வான்கார்ட்". அண்மையில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி உள்ளன. "வான்கார்ட்" திரைப்படம் இந்தியாவில் நாளை வெளியாகிறது.

விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகி 10 ஆண்டு நிறைவு

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆரம்பத்தில் பல சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, டுவிட்டரில் "10 years of vijay sethupathi" என்ற ஹேஸ்டேக்கை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

'காட்டேரி' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

"யாமிருக்க பயமேன்", "கவலை வேண்டாம்" ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. வைபவ், ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்