சிறந்த நடிகருக்கான விருது - மலையாள நடிகர் கின்னஸ் பக்ரூ தேர்வு

ஐதராபாத் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த நடிகருக்கான விருதுக்கு கேரள நடிகர் கின்னஸ் பக்ரூ தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருது - மலையாள நடிகர் கின்னஸ் பக்ரூ தேர்வு
x
தமிழில் டிஷ்யூம், ஏழாம் அறிவு, காவலன், அற்புத தீவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகர் கின்னஸ் பக்ரூ என்ற அஜய்குமார். உலகின் மிக குறுகியவர் என்ற சாதனைக்காக கடந்த 2008-ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருந்தார். மேலும் சிறந்த குணச்சித்திர நடிகர் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் மலையாளத்தில் வெளியான இளையராஜா என்ற படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஐதாராபாத் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்