தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு வெற்றி சான்றிதழ்களை வழங்கி கவுரவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு வெற்றி சான்றிதழ்களை வழங்கி கவுரவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி , துணைத்தலைவராக  ஆர்.கே சுரேஷ்  மற்றும் கதிரேசன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மன்னன் உட்பட  21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  தயாரிப்பாளர்கள்  எஸ்.ஏ. சந்திரசேகர் , ஐசரி கணேஷ் கே.ஆர் ஆகியோரும் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்