சர்வதேச திரைப்பட விழாவில் "கைதி" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சி
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 02:48 PM
கனடாவின் டொரண்டோவில் வருகிற 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது.
கனடாவின் டொரண்டோவில் வருகிற 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் திரையிட கார்த்தியின் கைதி திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கடந்த தீபாவளிக்கு வெளி வந்த கைதி திரைப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

3 கோடி பார்வையாளர்களை பெற்ற "புட்ட பொம்மா"

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் நடிப்பில் வெளியான ஆல வைகுந்த புரம்லு படத்தில், புட்ட பொம்மா என்ற பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூடியூப் தளத்தில் 3 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை அந்த படத்தின் இசையமைப்பாளர் தமன், மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

"ரகிட ரகிட" பாடல் - ரசிகர்கள் அமோக வரவேற்பு 

ஜெகமே தந்திரம் படத்தில் வரும் "ரகிட ரகிட" பாடல் யூடியூப் தளத்தில் 60 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. கடந்த ஜூலை 28ம் தேதி, தனுஷ் பிறந்தநாளையொட்டி இந்த பாடல் வெளியான நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சந்திரமுகி 2 நடிகை யார்?- ராகவா லாரன்ஸ் தகவல்

சந்திரமுகி 2ம் பாகத்தை எடுத்து வரும் ராகவா லாரன்ஸ், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக நடிகைகள் ஜோதிகா, சிம்ரன், கிரா அத்வானியின் பெயர்கள் உலா வந்தன. ஆனால் இதனை மறுத்துள்ள ராகவா லாரன்ஸ், கதைக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், கொரோனா சூழல் முடிந்து, சந்திரமுகி கதாப்பாரத்தில் நடிக்கப்போகும் நடிகை யார் என்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1068 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

282 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

96 views

தண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை

சென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார்.

77 views

பிற செய்திகள்

இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்

மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 views

துக்ளக் தர்பார் - "அண்ணாத்த செய்தி" பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

566 views

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகி உள்ளது.

78 views

"ரகிட ரகிட" பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை

தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

431 views

சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

314 views

"இசைக்கருவிகள், இசை குறிப்புகள் திருட்டு" - பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா அளித்த புகார் குறித்து இன்று நேரில் விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

180 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.