வீட்டிலேயே சூதாட்ட கிளப்- நடிகர் ஷ்யாம் கைது - சொந்த ஜாமீனில் விடுவித்த நுங்கம்பாக்கம் போலீஸ்
பதிவு : ஜூலை 28, 2020, 12:45 PM
வீட்டில் சூதாட்ட க்ளப் நடத்தியதாக திரைப்பட நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் 12 பி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம்.. தொடர்ந்து லேசா லேசா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்  சாக்லேட் பாய் தோற்றத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஹீரோ வாய்ப்பு இல்லாததால் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஷாம் நடித்து வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்றில், சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை செய்த போது, நடிகர் ஷாம் உள்ளிட்ட 14 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஷாமின் நண்பர்களான தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், உதவி இயக்குநர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை கைது செய்த போலீசார் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் இல்லாத நிலையில், தனது நுங்கம்பாக்கம் வீட்டை ஷாம் சீட்டாட்ட கிளப்பாகவே பயன்படுத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர் புகார்களால் ஷாம் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கைதானவர்கள் மீது தொற்று நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

342 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

149 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

14 views

பிற செய்திகள்

இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்

மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

16 views

துக்ளக் தர்பார் - "அண்ணாத்த செய்தி" பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

622 views

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகி உள்ளது.

90 views

"ரகிட ரகிட" பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை

தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

447 views

சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

334 views

"இசைக்கருவிகள், இசை குறிப்புகள் திருட்டு" - பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா அளித்த புகார் குறித்து இன்று நேரில் விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

209 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.