'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விலகுகிறார் சத்யராஜ்..?

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த சத்யராஜ், அந்த படத்தில் இருந்து விலக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகுகிறார் சத்யராஜ்..?
x
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த சத்யராஜ், அந்த  படத்தில் இருந்து விலக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப்  படத்தில், அமிதாப் பச்சன், பார்த்திபன்,  ஐஸ்வர்யாராய் , கீர்த்தி சுரேஷ் , அமலாபால்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இதில், சத்தியராஜூம் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆறு மாதத்திற்கு பொன்னியின் செல்வன் தவிர்த்து வேறு எந்த  படத்திற்கும்  கால்சீட் ஒதுக்கக் கூடாது  என மணிரத்னம் தரப்பில் கூறப்பட்டதால், சத்தியராஜ் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்