வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை - நடிகர் தனுஷ்

வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை அளித்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை - நடிகர் தனுஷ்
x
வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வேதனை அளித்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் அசுரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய படத்தின் நாயகன் தனுஷ், விருதுக்காக படம் எடுக்கவில்லை என்றாலும், வடசென்னை, ராட்சசன், பரியேறும் பொருமாள் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன் என்று யோசனை செய்ததாக கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர், நாயகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை தராமல் ஏமாற்றுவதாகவும் குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்