எப்படி இருக்கிறது நோட்டா ?

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி , கீதகோவிந்தம் போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் நடிக்கும் முதல் திரைப்படம் நோட்டா.
எப்படி இருக்கிறது நோட்டா ?
x
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி , கீதகோவிந்தம் போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் நடிக்கும் முதல் திரைப்படம் நோட்டா.

மக்கள் வாக்களிக்கும் போது எந்த கட்சியினரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள்.இந்த தலைப்பின் மூலம் தெரிகிறது, இது ஒரு அரசியல் சார்ந்த படம்.இந்த படத்தில் சத்யராஜ், நாசர், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், நடிகைகள் யாஷிகா ஆனந்த் ,சஞ்சனா நடராஜன், மெஹரீன் பிர்சாடா(mehreen pirzada) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை தமிழிலும் தெலுங்கிலும் எடுத்து ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர், ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக் கொள்கிறார். அதில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு சாமியார் பேச்சைக்கேட்டு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து,அவரது மகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டாவை முதலமைச்சர் ஆக்குகிறார் .எப்பொழுதுமே நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் ஹீரோவிற்கு முதலமைச்சரின் வேலைகள் என்ன என்று தெரியாமல் ஒரு டம்மி சி எம் ஆக இருக்கிறார் .ஊழல் குற்றச்சாட்டு உறுதியாகி நாசர் டெல்லி சிறையில் அடைக்கப்படுகிறார்.
 

மத்திய அரசிடம் தனது செல்வாக்கை காட்டுவதற்காக, நாசர் கட்சித் தொண்டர்களை கலவரம் செய்யும்படி தூண்டி விடுகிறார். கலவரத்தில் எதிர்பாரதவிதமாக ஒரு பள்ளிக்கூட சிறுமி பலியாகிறார்.இதைக் கண்டு மனமுடைந்த ஹீரோ அந்த இடத்திற்கு போய் கலவரத்தை கட்டுப்படுத்துகிறார் .அவருக்கு நல்ல பேரும் கிடைக்கிறது.அவரை செல்லமாக"ரவுடி சி எம்" என்று மக்கள் கூப்பிட தொடங்குகிறார்கள் . இவருக்கு நாசரின்  பழைய நண்பராக வரும் சத்யராஜ் உதவுகிறார்.சாமியார் நாசரை ஏமாற்றி அவரிடம் இருக்கும் பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை தன்வசம் மாற்றி அமைக்க , நாசரைக் கொல்ல முயற்சிக்கிறார்.ஹீரோ அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை திறமையாக கையாளுகிறார். தன் மகனாக இருந்தாலும், நாசர் அவனுடைய இந்த அரசியல் வளர்ச்சியை பிடிக்காமல் , அவருக்கு பல இன்னல்களை கொடுக்கிறார்.இன்னொருபுறம் சாமியாரும் ஹீரோவுக்கு குடைச்சல் கொடுக்கிறார். இதையெல்லாம் ஹீரோ எப்படி சமாளித்து சாமர்த்தியமான அரசியல்வாதியாக மாறுகிறார்  என்பதே கதை. 


தமிழ்நாட்டில் நடந்த அரசியல் நிகழ்வுகளை இணைத்து ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.தெலுங்கு ஹீரோ என்றாலும், விஜய் தேவரகொண்டா இந்த படத்திற்கு அவரே தமிழ் டப்பிங் பேசியுள்ளார்.சாதாரணமான அரசியல் படமாக இல்லாமல், தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது ஸ்டிக்கர் அரசியல்,சட்டசபையில்  ஆட்சி பலத்தை நிரூபிக்க எம்எல்ஏக்களை  ரிசார்ட்டில்  வைத்து அடைத்தது போன்ற பல சம்பவங்களை நினைவு படுத்துகிறது.இசை அமைப்பாளர் சாம் சி.ஸ் பின்னணி இசை அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு பிரமாதமாக பொருந்தியுள்ளது. மொத்தத்தில் இந்த படம் தமிழில் ஒரு நல்ல இடத்தை விஜய் தேவரகொண்டாவுக்கு பெற்றுத்தரும்.

Next Story

மேலும் செய்திகள்