நடிகர் சங்க நிலமோசடி புகார் - சரத்குமார், ராதாரவி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

நடிகர் சங்கத்தின் நிலமோசடி தொடர்பாக அச்சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது
நடிகர் சங்க நிலமோசடி புகார் - சரத்குமார், ராதாரவி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
x
நடிகர் சங்க நிலமோசடி புகார் - சரத்குமார், ராதாரவி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவுகாஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 செண்ட் நிலத்தை கடந்த 2006-ஆம் ஆண்டு முறைகேடாக விற்றதாக அப்போதைய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி மீது தற்போதைய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் முறைகேடு தொடர்பான கூடுதல் தகவல்களை நடிகர் சங்க தலைவர் நாசர் சமர்பித்து இருந்தார். இதனைதொடர்ந்து வழக்கை விசாரணை செய்த காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சரத்குமார், ராதாரவி மற்றும் முன்னாள் நிர்வாகிகள் நடராஜன், நடேசன் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்