நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின்101வது நினைவு தினம் - நடிகர் நாசர் மரியாதை

x

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி நடிகர் சங்கத்தின் சார்பிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாடக கலைஞர்கள் புதுவை காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இருந்து நடனமாடியும், இசை வாத்தியங்களை முழங்கியவாறும் ஊர்வலமாக சென்று புதுச்சேரி கருவடி குப்பத்தில் உள்ள அவரது சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், புதுச்சேரி அமைச்சர் லஷ்மிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய படைப்புகளைக் கொண்டு நாடக விழா நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்