உக்ரைன் - ரஷ்யா இடையே, ஆயிரத்து 176வது நாளாக போர் நீடிக்கும் சூழலில், இருநாடுகளிடையே துருக்கியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நேரடி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின், துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி உக்ரைன்-ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார். அதேசமயம், ரஷ்யா சார்பில் பங்கேற்கும் அதிகாரிகளின் பெயர்களை அதிபர் புதின் வெளியிட்ட நிலையில், அவர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டார் என்றே தெரிகிறது.